[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் ஹிர்த்திக்- சஞ்சய் தத்!

sanjay-dutt-and-hrithik-in-vikram-vedha-remake

’விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கில் ஹிர்த்திக் ரோஷனும் சஞ்சய் தத்தும் நடிப்பது உறுதியாகியுள்ளது.

மாதவன், விஜய் சேதுபதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம் வேதா’. புஷ்கர் - காயத்ரி இயக்கிய இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்தார். சாம் சி.எஸ். இசையமைத்திருந்த இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் மற்றும் பிளான் சி ஸ்டுடியோஸ் ஆகியோருடன் இணைந்து சஷிகாந்த் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை படத்தைப் பார்த்த ஷாரூக், இந்தி ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். அவருக்கு விஜய் சேதுபதி நடித்திருந்த வில்ல ன் கேரக்டர் பிடித்திருந்தது. அதில் நடிக்க முடிவு செய்திருந்தார். ஆனால் படத் தயாரிப்பு நிறுவனம் அவரை மாதவன் கேரக்டரில் நடிக்குமாறு கேட்டதாம். அதோடு இந்தப் படத்தை ஷாரூக் கான் இயக்கி நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் கதையில் சில மாற்றங்கள் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்தப் படத்தின் ரீமேக்கில் இருந்து ஷாரூக் கான் விலகிவிட்டார்.

இதையடுத்து வேறு சில ஹீரோவிடம் பேசி வந்தனர். இந்நிலையில் ஹிர்த்திக் ரோஷனும் சஞ்சய் தத்தும் நடிப்பது உறுதியாகியுள்ளது. மாதவ ன் நடித்த கேரக்டரில் சஞ்சய் தத்தும் விஜய் சேதுபதி வேடத்தில் ஹிர்த்திக் ரோஷனும் நடிக்கின்றனர். தமிழில் இயக்கிய புஷ்கர்- காயத்ரியே இயக்குகின்றனர். சாம்.சி.எஸ் இசை அமைக்கிறார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close