[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ஆஸ்கருக்கு செல்லும் அசாம் மொழி படம்!

assamese-film-village-rockstars-is-india-s-official-entry-to-oscars

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவுக்கு, இந்தியாவில் இருந்து ’வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ என்ற அசாமிய படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரிமா தாஸ் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள அசாம் மொழி படம், ’வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’. நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தில் பனிதா தாஸ், மனபென்ட்ரா தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். தேசிய விருதுகள் மட்டுமின்றி பல்வேறு பட விழாக்களிலும் விருதுகளை வென்றுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 91ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவத், தப்ரேஸ் நூரானி இயக்கத்தில் வெளியான லவ் சோனியா, நந்திதா தாஸ் இயக்கிய மண்டோ உள்ளி ட்ட 28 படங்களில் இருந்து இந்தப் படத்தை எஸ்.வி. ராஜேந்திர சிங் பாபு தலைமையிலான குழு தேர்வு செய்துள்ளது. இந்தியத் திரைப்படச் சம் மேளனம் (FFI) இதைத் தெரிவித்துள்ளது.

ஜூரி உறுப்பினரும் இயக்குனர் மற்றும் நடிகருமான ஆனந்த் மகாதேவன் கூறும்போது, ‘இந்தப் படம் சர்வதேச தரத்துக்கு நெருக்கமான படமாக  இருக்கிறது. இந்தப் படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்வது பெருமையாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close