[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

சசிகுமாரின் ’கொம்பு வச்ச சிங்கம்’! கீர்த்தி சுரேஷ் ஹீரோயினா?

keerthy-suresh-on-board-for-sasikumar-s-next

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்துக்கு ’கொம்பு வச்ச சிங்கம்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். 

’அசுரவதம்’ படத்துக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கும் ’நாடோடிகள் 2’ படத்தில் நடித்துள்ளார் சசிகுமார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையே, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இதில் தனுஷுக்கு அண்ணனாக அவர் நடிக்கிறார்.

Read Also -> “நான் ஒரு ஹிட்லர் தாய்..” மனம் திறந்த கஜோல்

இந்தப் படத்தை அடுத்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சசிகுமார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ’சுந்தரபாண்டியன்’ படத்தில் இணைந்திருந்தனர்.
இந்தப் படத்தில் சசிகுமாருடன் யோகி பாபு, ஆரவ், சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Read Also -> ’எல்லாத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கு’: திருமணத்தை நிறுத்திய ஹீரோயின் விளக்கம்!  

(எஸ்.ஆர்.பிரபாகர்)

’கனா’ படத்துக்கு இசை அமைத்துள்ள திரு நினன் தாமஸ் இசை அமைக்கிறார். ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்தப் படத்தில் சசிகுமார் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாயின.

இதுபற்றி படக்குழுவிடம் கேட்டபோது, ‘கீர்த்தி சுரேஷிடம் கேட்டது உண்மைதான். அவர் நடிக்க தயாராக இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவரை நடிக்க வைக்க முடியவில்லை. வேறு ஹீரோயினை தேடி வருகிறோம்’ என்றது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close