[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஷூட்டிங் நடந்து கொண்டிருக்குபோதே இறந்த நடிகர்: படக்குழு அதிர்ச்சி

actor-kunju-muhammed-dies-during-shooting

ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதே நடிகர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூர் அருகில் உள்ள மதிலகம் என்ற ஊரைச் சேர்ந்தவர் குஞ்சு முகமது (58). சிறுவயதி லேயே நாடகங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த அவர் பிறகு சென்னை வந்து வாய்ப்பு தேடினார். தயாரிப்பு நிர்வாகியாக பல படங்களில் பணியாற்றினார். பின் கேரளா சென்றார். அங்கு வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் கமல் அவருக்கு வாய்ப்பளித்து அவர் இயக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்தார். இந்நிலையில் சத்யன் அந்திக்காடு இயக்கும் படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை நடந்த படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் பதட்டமான படக்குழுவினர் அவரை, உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர்.  பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குஞ்சு முகமதுவின் மரணம் கேரள திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close