[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

அக்டோபர் 4ல் திரைக்கு வருகிறது ‘96’

96-the-movie-will-be-releasing-worldwide-on-october-4th

விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 திரைப்படம் அடுத்த மாதம் 4ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

விஜய்சேதுபதி, த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘96’. இதில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று தோற்றங்களில் நடித்துள்ளார். இதனை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்கியுள்ளார். இவர் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

இப்படத்தில் ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீஸர் கடந்த ஜூலை 12ம் தேதி வெளியானது. டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல், 96 பட பாடல்களும் இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு விட்டது. 

         

இந்நிலையில், 96 படம் வெளியாகும் தேதி இன்று மாலை 7 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 4ல் படம் வெளியாகிறது. இந்த தகவலை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதனிடையே, 96 படத்திற்கான தெலுங்கு டப்பிங்கில் நானி, சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கான டப்பிங் உரிமையை தயாரிப்பாளர் தில் ராஜு ஒப்பந்தம் செய்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close