[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கல்யாணம் ஆயிடுச்சுன்னு நம்பவே முடியவில்லை: சுவாதி

i-can-t-believe-that-i-m-married-swathi-reddy

எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை இன்னும் நம்ப முடியவில்லை என்று நடிகை சுவாதி கூறினார்.

தமிழில் 'சுப்ரமணியபுரம்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தெலுங்கு நடிகை சுவாதி. 'போராளி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகு மாரா', ’வடகறி', 'யட்சன்', 'யாக்கை' என சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்த 'ஆமென்' படம் சூப்பர் ஹிட்டானது. இவரும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பைலட்டாக பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த விகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர்.

Read Also -> நடிகர் சென்றாயனுக்கு ’திருமந்திரம்’ பரிசளித்த சிம்பு!

காதலுக்கு இரண்டு பேர் குடும்பமும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த மாதம் 30 ஆம் தேதி இவர்கள் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. கொச்சியில் கடந்த 2- ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு பேசிய சுவாதி, ’எனக்கு திருமணமாகி விட்டது என்பதை இன்னும் நம்ப முடியவில்லை. இப்போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ நடமாடிக் கொண்டிருக்கிறேன். விகாஷ்தான் திருமணமாகிவிட்டது என்பதை ஞாபகப் படுத்திச் செல்கிறார். அன்றைய தினம் எனக்கு உண்மையிலேயே சிறப்பான நாளாக அமைந்தது.

Read Also -> இயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது! 

ஏனென்றால் அமெரிக்காவில் இருந்தும் லண்டனில் இருந்தும் எனது சிறுவயது தோழிகள் வந்திருந்தார்கள். இதற்கு மேல் வேறு என்ன வேண் டும்? அவர்கள் வருவார்கள் என நினைக்கவில்லை. ஹனிமூன் செல்வது பற்றி கேட்கிறார்கள். உடனடியாக எங்கும் செல்லும் முடிவில் இல் லை. இப்போது நான் இரண்டு படங்களில் நடித்து கொடுக்க வேண்டும். அதற்கான வேலையில் இருக்கிறேன்’ என்றார். 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close