ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக், மீண்டும் அப்பாவாகி இருக்கிறார்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. இயான் ஃபிளமிங்க் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட பாண்ட் கேரக்டரை கொண்ட படங்கள், வசூலிலும் சாதனை படைக்கிறது. பாண்ட் பட வரிசையின் 25 வது படம், டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடிக்கும் டேனியல் கிரேக் இரண்டாவது முறையாக அப்பாவாகி இருக்கிறார். கிரேக், 1992-ல் ஃபியானோ லாடன் என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. 1994-ல் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து சில நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்ட டேனியல் கிரேக், ’ட்ரீம் ஹவுஸ்’ என்ற படத்தில் நடித்தபோது அதில் ஹீரோயினாக நடித்த ராச்சல் வியஸை காதலித்தார்.
வியஸ், தான் காதலித்து வந்த இயக்குனர் டேரன் அரோனோஃப்ஸ்கியை பிரிந்து 2010-ம் ஆண்டு கிரேக்கை திருமணம் செய்துகொண்டார். வியஸுக்கு அப்போது ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான்.
இந்நிலையில் திருமணம் முடிந்து 8 வருடத்துக்குப் பின் ஜேம்ஸ்பாண்ட் கிரேக், மீண்டும் அப்பாவாகி இருக்கிறார் இப்போது. நிறைமாத கர்ப்பி ணியாக இருந்த ராச்சலுக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு
கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !