[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

சரித்திர படம் இயக்குகிறார் சசிகுமார்: ராஜமவுலியிடம் ஆலோசனை!

sasikumar-met-rajamouli-at-hydrabad

இயக்குனரும் நடிகருமான சசிகுமார் சரித்திரப் படம் இயக்க இருக்கிறார். இதற்காகப் பிரபல இயக்குனர் ராஜமவுலியிடம் ஆலோசனை பெற்றுள்ளார்.

’அசுரவதம்’ படத்தின் ஹிட்டுக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கும் ’நாடோடிகள் 2’ படத்தில் நடித்துள்ளார் சசிகுமார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையே, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இதில் தனு ஷுக்கு அண்ணனாக அவர் நடிக்கிறார்.


இந்தப் படத்தை அடுத்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ’சுந்தரபாண்டியன்’ படத்தில் இணைந்திருந்தனர். இதற்கு பிறகு சில படங்களில் நடித்து முடித்துவிட்டு சரித்திர படம் இயக்குகிறார் சசிகுமார்.

மெகா பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப் படத்துக்காக, இயக்குனர் ராஜமவுலியிடம் அவர் ஆலோசனை பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாயின. இதை வைத்து அவர் ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது.

மகதீரா, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் சரித்திர காட்சிகளை பிரமாண்டமாக அமைத்தவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். இந்தப் படத்தை அடுத்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் கதை விவாதம் ஐதராபாத்தில் இப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் சசிகுமார், ராஜமவுலிக்கு ஃபோன் செய்து, சந்திக்க வேண்டும் என்று நேரம் கேட்டார். உடனடியாக வரச் சொன்னார் அவர். ஐதரா பாத் சென்ற சசிகுமார் அங்கு அவரை சந்தித்துப் பேசினார். தான் இயக்கப் போகும் சரித்திர படம் பற்றியும் அதை எடுப்பது தொடர்பான டெக்னிக் கல் விஷயங்களையும் அவரிடம் சசிகுமார் கூறியுள்ளார்.  அதற்கு அவர் எந்த ஈகோவும் பார்க்காமல் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் ஆலோசனையின் படி அந்தப் படத்தை எடுக்க உள்ளதாக சசிகுமார் தரப்பு தெரிவித்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close