[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

சல்மான் படத்தில் இருந்து இதற்காகத்தான் விலகினாரா பிரியங்கா?

priyanka-chopra-signs-hollywood-film-cowboy-ninja-viking

ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காகவே சல்மான் கான் படத்தில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ரா விலகி இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. 

தமிழில் விஜய் நடித்த ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த பாப் பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்து வருகிறார்.

இதற்கிடையே இவர்களில் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளியாயின. இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதற்காக, சல்மான்கானுடன் அவர் நடிக்க இருந்த ’பாரத்’ என்ற படத்தில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது. அந்தப் படத்தின் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், ’பிரியங்கா சோப்ரா இந்தப் படத்தில் இல்லை. ’காரணம் மிகவும் ஸ்பெஷலானது’ என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். அவரது முடிவில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். அவருக்கு எங்கள் படக்குழு வாழ்த்துகளை தெரிவிக்கிறது’ என்று கூறியிருந்தார். இதனால் திருமணத்துக்காகத்தான் அவர் இந்தப் படத்தில் இருந்து விலகினார் என்று கூறப்பட்டது.

(பிரியங்கா- கிறிஸ் பிராட்)

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார். இதற்காகத்தான் இந்தி படத்தில் இருந்து அவர் விலகினார் என்பதும் தெரியவந்துள்ளது. பிரியங்கா, யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிக்கும், ‘கவுபாய் நிஞ்சா விக்கிங்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தில் கிறிஸ் பிராட் ஹீரோவாக நடிக்கிறார். பிராட், ’ஜூராசிக் வேர்ல்ட்’, ’தி கார்டியன்ஸ் ஆப் த கேலக்ஸி’, ’அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ உட்பட சில படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 

பிரியங்கா ஏற்கனவே, ’எ கிட் லைக் ஜேக்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்போது ’இஸ்நாட் இட் ரொமாண்டிக்?’, ’த ஸ்கை இஸ் பிங்க்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close