[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்

பிரியங்கா- நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் முடிந்தது?

priyanka-chopra-nick-jonas-engaged-foreign-media-confirms

நடிகை பிரியங்கா சோப்ரா- பாப் பாடகர் நிக் ஜோனாஸ் ஜோடி திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழில் விஜய் நடித்த ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த பாப் பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்து வருகிறார். நிக் ஜோனாஸின் உறவினர் திருமணத் தில் பிரியங்கா கலந்துகொண்டார். இதை வைத்து இருவரும் காதலிப்பது உண்மைதான் என்று கூறப்பட்டது. ஆனால், பிரியங்கா சோப்ரா இதுபற்றி ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், நிக் ஜோனாஸின் முன்னாள் காதலி டெல்டா கூட்ரெம் (Delta Goodrem), இதை உறுதிப் படுத்தி இருந்தார். இந்நிலையில் அம்பானி இல்ல திருமண விழாவில் நிக்குடன் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டார்.

அப்போது தனது குடும்பத்தினரிடம் நிக்கை அவர் அறிமுகம் செய்துவைத்தார். அந்த விழாவில் இருவரும் கைகோர்த்தபடி வந்தது, அனைவரின் சந்தேகங்களையும் உறுதிப்படுத்தியது. காதல் பற்றி கருத்துச் சொல்லாமல் இருந்த பிரியங்கா, இப்போது முதன்முதலாக அதுபற்றி பேசினார். ‘சமீபத்திய இந்திய சுற்றுப்பயணம், நிக்கிற்கு சிறந்த அனுபவமாக இருந்தது. இதன்மூலம் ஒருவரையொருவர் தெரிந்து கொண்டோம். அவர் இந்தப் பயணத்தை அனுபவித்து ரசித்தார்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ள ட்விட்டர்வாசிகள், அவர்களுக்கு செல்லப்பெயர்களை வைத்துள்ளனர். அதாவது இரண்டு பேரின் (Priyanka chopra- Nick Jonas) பெயர்களையும் இணைத்து பிரிஜோனாஸ் (PriJonas), ஜோ பிரிஸ் (JoPri) என்ற பெயர்களை வைத்தனர்.

இந்நிலையில் இவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக வெளிநாட்டு பத்திரிகைகள் கூறியுள்ளன. கடந்த வாரம் நியூயார்க்கில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்த மோதிரம் வாங்கியதாகவும் இருவரும் இப்போது அதிக மகிழ்ச்சியில் இருப்பதாகவும் ஹாலி வுட் பத்திரிகைகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சல்மான் கான் நடிக்கும் ’பாரத்’ என்ற படத்தில் பிரியங்கா நடிக்க இருந்தார். இதன் மூலம் இந்தி சினிமாவுக்கு அவர் மீண்டும் வரு வதாக இருந்தது.  அந்த படத்தில் இருந்து திடீரென்று அவர் விலகியுள்ளார். இதுபற்றி படத்தின் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், ’பிரியங்கா சோப்ரா இந்தப் படத்தில் இல்லை. ’காரணம் மிகவும் ஸ்பெஷலானது’ என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். அவரது முடிவில் எங்களுக்கு மகிழ்ச் சிதான். அவருக்கு எங்கள் படக்குழு வாழ்த்துகளை தெரிவிக்கிறது’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது எனக் கூறப்படுகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close