[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

நம்ம வாழ்க்கை, நம்ம ஓட்டம்: நடிகர் சூர்யா பர்த்டே அட்வைஸ்!

actror-surya-advice-to-his-fans

நடிகர் சூர்யாவுக்கு இன்று பிறந்த நாள். 43-வது வயதை தொடும் சூர்யா, பிறந்த நாளை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன் ரசிகர்களை சந்தித்தார். அப்போது வாழ்த்துத் தெரிவித்த ரசிகர்கள் முன் அவர் பேசியதாவது:

குழந்தையாக இருக்கும்போது முதன் முதலில் சைக்கிள் வேண்டும் என ஆசைப்படுவோம். அடுத்து வளர்ந்ததும் பைக் வேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடிப்போம். அடுத்து கார். இப்படி வாழ்க்கையில் புதுசு புதுசு என்று எப்போதும் உற்சாகம் இருந்துகொண்டே இருக்கும். அது அப்படியே கல்லூரி, வேலை, திருமணம் என்று அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துக்கொண்டே இருக்கும். இந்தமாதிரி   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வம் இப்போது நிறைய பேருக்கு குறைகிறதோ என்று தோன்றுகிறது. வாழ்க்கையில் ‘இது போதும்டா’ என்று சிலர் நினைக்கிறார்கள். ஈஸியாக சலிப்படையவும் செய்கிறார்கள்.

எப்போதும் ஒரு புது அனுபவம் வைத்துக்கொள்ளுங்கள். நாம் செய்யும் வேலையில்  நாம்தான் பெஸ்ட்டா இருக்கணும் என்று மனசுல ஆழமா நினையுங்க. என்னென்ன விஷயங்கள் கற்றுக்கொண்டே இருக்க முடியுமோ கத்துக்கிட்டே இருங்க.  வாழ்க்கையில ஒரு விஷயம் மட்டும் போதும்னு இங்கே இல்லை. 

இப்போ எல்லாம் சந்தோஷம் ரொம்ப முக்கியம். கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடுகிறது. எதுக்காகவோ அந்த சந்தோஷத்தை நாம விட்டுவிடுறோம். எந்த காரணத்துக்காகவும் அதை இழக்கக்கூடாது. சந்தோஷம் என்பது சுலபமான விஷயம் அல்ல. வீடு, பணம் மட்டு மே சந்தோஷத்தை கொடுத்துடாது. மனதை எப்பவும் சந்தோஷமா வைத்துக்கொள்வதே கலை.  

நிறைய படித்து, அறிவாளியா இருக்குற ஒருவர் எப்பவும் உர்ர்ர்னு யார்கிட்டயும் எதுவும் பேசாம இருந்தா அவரை யாரும் சீண்டக்கூட  மாட்டாங்க. அதுவே எப்பவும் சிரிச்சிக்கிட்டே மகிழ்ச்சியாக இருக்குறவங்களை சுத்தி நிறைய பேர் இருப்பாங்க. நாம வேலை செய்ற இடத்துல தொடங்கி எல்லா இடங்கள்லயும் சந்தோஷத்தை காட்டுறது ரொம்ப முக்கியம்.

யாரோடயும் யாரும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம். அது தேவையில்லாம மன உளைச்சலை கொடுக்கும். நம்ம வாழ்க்கை, நம்ம ஓட்டம்னு இருக்கணும். நம்ம வேலை நமக்கு பெஸ்ட்னு இருக்கணும். அதுல என்ன புது அனுபவம் கிடைத்ததுன்னு பார்க்கணும். எதிலும் தனித்து நிற்கணும். 

வயசு போய்க்கிட்டே இருக்கும். அதுக்குள்ள நல்ல உயரத்தை தொடணும். உடல் உறுப்பு தானம், ரத்ததானம்னு செய்ற என் ரசிகர்கள் ஒவ்வொருவரும் யாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது. இருக்க மாட்டீங்க.  நல்ல பழக்கங்களை கடைபிடிங்க. மற்ற எல்லாத்தையும் விட முதல்ல குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அதுதான் முக்கியம்.

இவ்வாறு சூர்யா பேசினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close