[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

சுந்தர் பிச்சை கேரக்டரில் நடிக்கிறார் ‘சர்க்கார்’ விஜய்?

vijay-s-role-model-in-sarkar-is-the-world-s-powerful-tamilian

கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை வேடத்தில் நடிகர் விஜய் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருவதாக செய்தி கசிய தொடங்கியுள்ளது.

‘மெர்சல்’ ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்குப் பிறகு உலக அளவிலான தமிழர்களை மையமாக வைத்து சில விஷயங்களை தன் படத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் விஜய் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. ‘சர்கார்’ படமும் சர்வதேச அளவில் கவனம் பெற வேண்டும் என்பதில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெளிவாக இருக்கிறார். ‘மெர்சல்’ வெளியீட்டின் போதுதான் பிரச்னை தலைத்தூக்கியது. ஆனால் ‘சர்கார்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான அன்றே சர்ச்சை தீப்பிடிக்க தொடங்கிவிட்டது. 

இந்நிலையில் ‘சர்கார்’ படத்தில் விஜய், சர்வதேச அளவில் சாதனைப் படைத்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் வேடத்தில் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது. சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்து இங்கேயே  படித்தவர். இன்று உலக அளவில் பெரும் புள்ளியாக வலம் வருபவர். கூகுள் பங்குகளின் உயர்வால் இவரது சம்பளம்  ரூ.2,500 கோடியை தொட்டுள்ளது.  ஆகவே இவர் ‘ஆளப்போறான்’ தமிழர்களின் அடையாளமாக மாறியிருக்கிறார்.

இந்நிலையில் அமெரிக்க ரிட்டர்னாக விஜய் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருவதாக தெரிகிறது. அமெரிக்காவில் மிகப் பெரிய தொழில்நுட்ப வல்லுநராக இருக்கும் விஜய் இந்தியா திரும்புகிறார். அப்போது அவர் இங்கு விவசாயிகள் படும் கஷ்டங்களையும் அதற்கு பின்புலமாக நடக்கும் அரசியல்வாதிகளின் ஊழலையும் காண நேர்கிறது. ஆகவே அவர் ஊழலுக்கு எதிராகவும் அரசியல் அதிகாரத்திற்கு எதிராகவும் களம் காண்கிறார். இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் கதாப்பாத்திரம் கிட்டத்தட்ட கூகுள் சுந்தர் பிச்சையை முன் மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிய தெடங்கி உள்ளன. ஆனால் இதனை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close