[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

‘பில்லா 3’யா? சிம்புவின் ‘அதிரடி’?

simbu-not-playing-a-gangster-in-venkat-prabhu-s-film

வெங்கட் பிரபு இயக்க உள்ள சிம்புவின் திரைப்படம் ‘பில்லா3’யா என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த ஜூன் 27ம் தேதி அன்று சிம்புடன் சேர்ந்து படம் இயக்க உள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய அடுத்த படம் சகோதரர் சிம்புவுடன். இது ஒரு புதுமையான ஸ்கிரிப்ட். மேலும் இதில் நடிக்க உள்ள நடிகர்கள், டெக்னீஷியன்ஸ், படத்தின் தலைப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளி வரும். அசத்தலுக்கு தயாராக இருங்கள். இந்தப் படம் செமையான த்ரிலிங் சப்ஜெட். உங்கள் அன்பை வழங்குங்கள்” என்று கூறியிருந்தார். 

இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தப் படம் கேங்ஸ்டர் மூவி என பேச்சு அடிப்பட்டது. மேலும் வெங்கட் பிரபு ‘பில்லா3’யை எடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்தச் செய்திகள் எல்லாம் வதந்தி என்று தெரிகிறது. இந்தப் படம் ‘சரோஜா’, ‘கோவா’ டைப் த்ரிலர் படம் என்றே தெரிகிறது. இதற்கு தேசிய விருது பெற்ற பி.சி.ஸ்ரீராம் சினிமாட்டோகிராஃபி செய்ய இருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது அனிருத் இசையமைக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு ‘அதிரடி’ என தலைப்பு வைத்திருப்பதாகவும் அடுத்த வருடம் படம் திரைக்கு வர உள்ளதாகவும் தெரிகின்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close