[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

பரீட்சைக்கு கூட இப்படி கஷ்டப்பட்டதில்லை: துல்கர் வேதனை

dulquer-salmaan-says-dubbing-in-telugu-is-harder-than-preparing-for-exams

பரீட்சைக்கு கூட இப்படி கஷ்டப்பட்டதில்லை என நடிகர் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.  

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘மகாநதி’. இதற்கு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.  இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் சாவித்திரி பாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜெமினி கணேசன் காதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இந்தப் படம் மே 9 அன்று திரைக்கும் வர உள்ளது. தெலுங்கில் துல்கர் சல்மான் தனது சொந்தக் குரலில் டப்பிங் செய்ய இருக்கிறார்.

அதற்காக அவர் வசனங்களை எழுதி வைத்து இரவு பகலாக பேசி வரும் புகைப்படங்களை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். மேலும் அவரது டப்பிங் அனுபவம் குறித்தும் பதிவிட்டுள்ளார். அதில், “ நான் பரீட்சைக்கு படிக்கும் போது கூட இவ்வளவு கடுமையாக வேலை பார்த்திருக்க மாட்டேன். என் முதல் தெலுங்கு டப்பிங்கிற்காக எனது எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன்.” என்று வேதனையோடு பதிவிட்டுள்ளார். 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close