[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன

விக்ரம் மகன் துருவுக்கு ஜோடி இவரா..? 

gauthami-important-clarification-on-daughters-arjun-reddy-remake

இயக்குனர் பாலா இயக்கதில் நடிகர் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாக படம் ‘வர்மா’. இந்தப் படத்தில் துருவுக்கு யார் ஜோடி என்பது படக்குழுவால் இதுவரை அறிவிக்கபடாமல் இருந்து வருகிறது. 

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் காதல் படமாக கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. பெரும் வெற்றியைப் பெற்ற இப்படத்தின் தமிழ் உரிமையை இயக்குனர் பாலா வாங்கி இருந்தார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நேபாளம் காத்மாண்டுவில் நடைபெற்றது. அப்பாவை போலவே துருவும் பெரும்பாலான காட்சிகளை ஒரே டேக்கில் நடிந்து முடித்ததாகவும், மகனின் நடிப்பை பார்க்க விக்ரம் நேபாளம் சென்றிருப்பதாக தெரிய வந்தது.   

இந்தப் படத்தில் புதுமுக நடிகை ஒருவர் நடிக்கலாம் எனத் தெரிகிறது. அக்ஷராஹாசன்,சாய்பல்லவி பெயரும் அடிபட்டு வந்தது. இந்நிலையில்தான் அண்மையில் துருவுக்கு ஜோடியாக கெளதமி மகள் சுபலட்சுமி நடிக்கவுள்ளதாக செய்தி வெளியானது. இதை அறிந்த கெளதமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில்‘மறுபடியும் என் மகள் திரைவுலகில் அறிமுகமாகிறாள் என செய்தியைக் கண்டேன். என் மகள் படிப்பில் மும்முரமாக இருக்கிறாள். இப்போதைக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை. ஆனாலும் என் மகளை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’எனப் பதிவிட்டுள்ளார்


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close