[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்.. பரபரக்கும் காலா டீஸர் டயலாக் !

kaala-teaser-released

பா.ரஞ்சித் இயக்கத்தில் ர‌ஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படத்தின் டீசர் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியானது. தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டார்.

‘கபாலி’ வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி, ‘காலா’வின் டீசர் மார்ச் ஒன்றாம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மறைவையொட்டி, காலா டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில், காலா டீசரை நள்ளிரவு சரியாக 12 மணி அளவில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

கபாலி திரைப்படத்துக்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித்- ரஜினியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் காலா பட டீசரில், ரஜினிகாந்த் நெல்லைத் தமிழில் பேசி நடித்திருக்கிறார். அத்தோடு மட்டுமில்லாமல் ‘வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன், தில் இருந்தா மொத்தமாக வாங்கலே’ என்று அனல்பறக்க ரஜினி பேசியுள்ள பஞ்ச் வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கானோர் இந்த டீசரை தற்போது யூடியூப் பக்கத்தில் பார்த்துள்ளனர். மேலும் இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. காலா திரைப்படத்தில் இந்தி நடிகர் நானா பட்டேக்கர், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி என பலரும் நடித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close