[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

அரசியலில் குதிக்கிறாரா சிம்பு..?

actor-simbu-enters-into-politics

நடிகர் சிம்பு அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவரின் தந்தை டி.ராஜேந்தர் பதிலளித்துள்ளார்.

பிரபல நடிகரான டி.ராஜேந்தர் லட்சிய திமுக என்ற கட்சியையும் வழிநடத்தி வருகிறார். அரசியல் சூழல், மக்களின் பிரச்னைகள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளை தெரிவித்து வரும், டி.ராஜேந்தர் தற்போது தனது மகனும் நடிகருமான சிம்பு அரசியலுக்கு வருவாரா..? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த டி.ராஜேந்தர், “சிம்பு ரசிகர்களை கூட்டப்போகிறோம். என்ன முடிவு என்பதற்கு வெய்ட் அண்ட் சி” என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். நாங்கள் செய்ய போவதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். தான் ஒரு அரசியல்வாதி என்பதை விட ஆன்மிகவாதி என்பதுதான் உண்மை என்றும் டி.ராஜேந்தர் குறிப்பிட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close