[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

‘மைனா’நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் சிறையில் அடைப்பு

amala-paul-sexual-harassment-case-alakeshwara-is-arrested

நடிகை ‘மைனா’ நடிகை கொடுத்த பாலியல் தொல்லை புகாரில் கைதானவரை புழல் சிறையில் அடைப்பு. கைதானவரை அனுப்பி வைத்த மலேசியா நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை. 

தமிழ்த் திரையுலகில்‘மைனா’பட மூலம் அறிமுகமானவர் அந்த நடிகை. இவர் மலையாள படங்களில் நடித்துள்ளார்.  மலேசியாவில் அடுத்த வாரம் பெண்கள் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அங்கு நடைபெறவுள்ள நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார். அதற்காக தி.நகரில் தனியார் நடன பள்ளி ஒன்றில் ஒத்திகையில் ஈடுபட்டு வந்தார்.

நடன பள்ளிக்கு வந்த கானாத்தூர் ரெட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அழகேஷ்வரன் என்பவர் ‘மைனா’நடிகையிடம் பாலிடம் வந்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த அமலா பால் அவரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.  உடனே ‘மைனா’நடிகை தன்  உதவியாளர்களை அழைத்து  தெரிவித்தார். 
அவர்கள் அழகேஷ்வரனை பிடித்து மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து ’மைனா’நடிகை கொடுத்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அழகேஷ்வரனை கைது செய்தனர். பிறகு தி.நகர் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தன் நேரிடையாக விசாரணை நடத்தினார். 

மலேசியாவைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவர்தான் என்னிடம் ‘மைனா’நடிகை பற்றி தெரிவித்து நேரில் சென்ற பேச சொன்னார். மற்றபடி எனக்கு இதில் தொடர்பு இல்லை என விசாரணையில் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதைத்தொடர்ந்து அழகேஷ்வரனை மாம்பலம் போலீசார் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

அழகேஷ்வரன் யார் தூண்டுதல் பேரில் ‘மைனா’நடிகைக்கு தொல்லை கொடுத்தார்? மலேசியாவைச் சேர்ந்த இப்ராஹிம் யார்? அவர் பின்னணி என்ன? சினிமா துறையைச் சேர்ந்தவரா? வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறது? என்பது தொடர்பாக மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்‘மைனா’நடிகை எங்கெல்லாம் செல்கிறார்? என்பதனை எப்படி தெரிந்து கொண்டு சந்தித்து பேசினார்? யார் பின்னணி என்பது தொடர்பாக விசாரிக்க மாம்பலம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

‘மைனா’நடிகையின் உதவியாளர்கள் 3 பேர் மீது கைதான அழகேஷ்வரன் மாம்பலம் காவல் நிலையத்தில் தன்னை தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்படவிலல்லை. தன்னுடைய செல்போனை 3 உதவியாளர்களும் அடித்து உடைத்து விட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இடத்தில் எந்த செல்போனும் இல்லை என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த நடன பள்ளியில் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகேஷ்வரனை காவலில் எடுத்து விசாரிக்கவும் மாம்பலம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 ‘மைனா’நடிகை மேலாளர் பிரதீப் (தொலைபேசியி) தகவல்:  

என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. சம்பவம் நடந்தபோது நான் ஐதராபாத்தில் இருந்தேன். இன்றுதான் சென்னை வந்தேன். நானாகத்தான் மாம்பலம் காவல் நிலையம் சென்று நேற்று நடந்தது குறித்தும் வழக்கு குறித்து கேட்டறிந்து விட்டு சென்றேன். என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. ‘மைனா’ நடிகைக்கு கைதான அழகேஷ்வரனை தெரியாது.” என்றார்.  போலீஸ் தரப்பில் கேட்டபோது தகவல், ‘‘அவரை விசாரணைக்கு அழைக்கவில்லை. அவராகத்தான் வந்து சென்றார்” என தெரிவித்தனர்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close