[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட‘ஜருகண்டி’ஃபர்ஸ்ட் லுக்!

ar-murugadoss-release-jarugandi-film-first-look

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜருகண்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்கனர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த பிச்சுமணி இயக்கத்தில், ஜெய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘ஜருகண்டி’.  இந்தப் படத்தை ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் நிதின் சத்யா தயாரித்து வருகிறார்.

இதில் ரெபா மோனிகா ஜான், ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அத்துடன் ரோபோ ஷங்கர், டேனியல், இளவரசு, மைம் கோபி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். போபோ சஷி இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில் ஜருகண்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர், ஏ.ஆர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் படக்குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் #Jarugandi ட்விட்டரில் சென்னை அளவிலான ட்ரெண்ட்டில் இடம் பிடித்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close