ஜெயம்ரவி மற்றும் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் சங்கமித்ரா திரைப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, சிவா, நிக்கிகல்ராணி, கேத்ரின் தெரசா என்று ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள திரைப்படம் கலகலப்பு-2. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் சுந்தர்.சி, சங்கமித்ரா திரைப்படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சரித்திர பின்னணியில், பிரமாண்ட பொருட்செலவில் ஆர்யா, ஜெயம்ரவி நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்கயுள்ளதாக கடந்த வருடம் சுந்தர்.சி அறிவித்திருந்தார். இந்தப் படத்திற்கு ‘சங்கமித்ரா’ என்று பெயரிடப்பட்டிருந்தது. அதன் பின்பு, பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், இந்தத் திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும் இதற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கும் என்று இயக்குனர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். மேலும், படத்திற்கான தொழில்நுட்ப பணிகளின் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்