[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

எனக்குப் பிடித்தமான ஆட்டக்காரர் சச்சின்தான்: ரஜினிகாந்த்

my-all-time-favourite-is-sachin-tendulkar-rajinikanth

மை ஆல் டைம் ஃபேவரைட் சச்சின்தான் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ரஜினிகாந்த் தற்போது மலேசியா கலை விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கு நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கலை விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. இதில் நடிகர் கார்த்தி, விஜய் சேதுபதி, விஷால், ஆர்யா உள்ளிட்ட இளம் நடிகர்கள் முதல் ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் வரை அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கோலாலம்பூரில் நடக்கும் நட்சத்திர கலை விழாவில் பங்கேற்க சென்ற ரஜினிகாந்த், நேற்று மலேசிய பிரதமரை சந்தித்து பேசினார். அதன் பின் மிர்ச்சி சிவாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற பல திரைப் பிரபலங்கள் தங்களின் இளம் பருவ கிரிக்கெட் விளையாட்டு அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டனர். 

அப்போது பேசிய ரஜினிகாந்த், ”நான் ஒரு வேக பந்து வீச்சாளர், சிறு வயதில் சிறந்த கிரிக்கெட் வீரர். எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் நவாப் மேக் பட்டோடி. மேலும் ஏரப்லி பிரசன்னாவை எனக்குப் மிகவும் பிடிக்கும். தற்போதுள்ள இந்திய வீரரில் தோனியை மிகவும் பிடிக்கும் ஆனால் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் எப்போதும் சச்சின்தான்” என நெகிழ்ச்சியுடன் கூறினார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close