[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

சன்னி லியோன் டான்ஸ்: கர்நாடக அரசு அனுமதி மறுப்பு!

karnataka-govt-denied-permission-to-sunny-leone-to-perform-at-a-new-year-s-eve-show

கன்னட அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து பெங்களூரில் நடக்க இருந்த சன்னி லியோனின் நடனத்துக்கு கர்நாடக அரசு அனுமதி தர மறுத்துள்ளது.

பெங்களூர் வொயிட் ஆர்க்கிட் கன்வென்சன் மையத்தில்  புத்தாண்டை முன்னிட்டு, பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆபாச நடிகையான சன்னி லியோன், கலந்து கொண்டால் கலாச்சாரம் பாதிக்கும் என்று கூறி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. 

சன்னி லியோனின் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பெங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். கடந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் பெங்களூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடக அரசு அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை. 

நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறும்போது, ’சன்னி லியோன் வருவதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று தெரியவில்லை. இது குடும்ப விழாதான். அதை தவிர ஆபாசமான நடனம் ஏதும் நடக்கப் போவதில்லை. போலீஸிடம் இருந்து எந்த விதமான தடை உத்தரவும் எங்களுக்கு வரவில்லை. அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’ என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு  அனுமதி தரப்போவதில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close