[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

காதல் சண்டையும், கபடி சண்டையும் !

director-speaks-about-aruva-sandai

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து வரும் படம், ’அருவா சண்ட’.  கபடி வீரர் ராஜா ஹீரோ. நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், சௌந்தர்ராஜா, காதல் சுகுமார், மதுரை சுஜாதா உட்பட பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி ஆதிராஜன் கூறும்போது, ‘ காதல் சண்டையும், கபடிச் சண்டையும் தான் படத்தின் கதைக்களம். வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்திலும் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சாதி வெறி. தென்மாவட்டங்களில் அது கொழுந்துவிட்டு எரிகிறது.

தர்மபுரி கலவரங்கள், வட மாவட்டங்களிலும் சாதியின் வன்மத்தை பதிவு செய்கின்றன. இப்படிப்பட்ட கௌரவக் கொலைகளின் நியாய, அநியாயங்களை பொறி பறக்கும் வார்த்தைகளால் அலசும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இதன் திரைக்கதை. கிளைமாக்ஸ் மனசாட்சி உள்ள அனைவரையும் உலுக்கி எடுக்கும். கபடி வீரர்களின் லட்சியங்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும் படம் அமைந்திருக்கிறது’ என்றார்.

படப்பிடிப்பு முடிவடைத்து டப்பிங் பணி இப்போது நடந்து வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close