[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய பாஜக கட்சி அலுவலகத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்
  • BREAKING-NEWS நாகை: அவுரி திடல் அருகே ஆளுநருக்கு எதிராக திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி
  • BREAKING-NEWS சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு
  • BREAKING-NEWS திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96

மேன்மை குணத்தால் கணேஷ் வெங்கட்ராமனுக்கு கிடைத்த பரிசு..!

new-recognition-to-ganesh-venkatraman

நடிகர் பிரித்திவிராஜ் நடிக்கும் மலையாள படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்க உள்ளார்.

பிக்பாஸ் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், தனது மேன்மை குணத்தால் அதன் மூலம் நல்ல ரசிகர்களை பெற்றவர் கணேஷ் வெங்கட்ராமன். பிக்பாஸிற்கு பின் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ரோஷ்னி தினேகர் இயக்கும் மலையாள படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்க உள்ளார். நடிகர் பிரித்திவிராஜ், பார்வதி ஆகியோர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெயர் " மை ஸ்டோரி".

பிக்பாஸில் கணேஷ் வெங்கட்ராமனின் உண்மை முகத்தை கண்ட இயக்குநர் ரோஷ்னி, அதன் மூலம் ஈர்க்கப்பட்டு அவரை இப்படத்தில் நடிக்க அணுகியுள்ளார். படத்தில் நடிக்க கணேஷ் வெங்கட்ராமனும் உடனடியாக ஒகே சொல்லியிருக்கிறார். இதுதவிர தமிழிலும் இரண்டு கதைகளை கேட்டுள்ள கணேஷ், அதிலும் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close