[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ரஜினியை முந்துகிறார் கமல்...விஸ்வரூபம் 2 ஜனவரியில் வெளியீடு?

kamal-haasan-s-vishwaroopam-2-to-release-in-january-2018

ரஜினியின் 2.ஓ-வை முந்திக் கொண்டு கமலின் விஸ்வரூபம் 2 வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பரில் ரஜினியின் 2.ஓ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். ஆனால் விஎஃப்எக்ஸ் வேலைகள் இழுத்துக் கொண்டிருப்பதால் அது தள்ளிப் போகலாம் என செய்தி வெளியானது. படமும் பொங்கல் விருந்தாக வெளியாகாது என கூறப்படுகிறது. இதனிடையே கமல் தன் வேகத்தை கூட்டி இருக்கிறார். விஸ்வரூபம் 2 வின் போஸ்ட் புரரெக்‌ஷன் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து வேலைகளையும் இந்த வருட இறுதியோடு முடிக்க இருக்கிறார் கமல். தனது படத்தை ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறார். 
கமலின் திட்டப்படி ஏப்ரலில்தான் வெளியிடும் திட்டம் இருந்துள்ளது. ரஜினியின் 2.ஓ தாமதத்தால் கமல் தன் படத்தை முன்பே வெளியிட முடிவெடுத்திருக்கிறார். அரசியலை போலவே கமல் சினிமாவிலும் ரஜினியை முந்தி வந்து கொண்டிருக்கிறார். அவரது சமீப கால நடவடிக்கைகள் அவ்வாறுதான் இருக்கின்றன என நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர். விஸ்வரூபம் 2 வை கமல்ஹாசன் இயக்கியுள்ளார். இதில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் என பலர் நடித்திருக்கிறார்கள். இதன் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்து விட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close