[X] Close
JUST IN
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
 • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
 • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
 • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
சினிமா 09 Oct, 2017 04:47 PM

தீபிகா படுகோனேவின் பத்மாவதி ட்ரெய்லர் வெளியானது

padmavati-trailer-release-today

பாலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி ட்ரெய்லர் வெளியானது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படம் பத்மாவதி. இதை பாலிவுட் பாகுபலி என ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். சஞ்சய் இதற்கு முன் பாஜிராவ் மஸ்தானியை இயக்கி பெயர் எடுத்தவர். அந்தப் படம் வரலாற்று பின்னணியில் எழுதப்பட்டிருந்த மராத்தி நாவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. திரும்பவும் ஒரு வரலாற்று கதையை எடுக்க முடிவு செய்த சஞ்சய் லீலா பன்சாலி இப்போது பத்மாவதியை எடுத்திருக்கிறார். இது 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் கதையை கருவாக கொண்டு எடுக்கப்பட்டிருகிறது.

பத்மாவதி படக் குழு ஒவ்வொரு பர்ஸ்ட் லுக்கையும் தனித்தனியாக வெளியிட்டு ரசிகர்களின் உற்சாகத்தை உசுப்பிக் கொண்டே இருந்தது. வரலாற்று கதையில்தான் இது பாகுபலியை ஒத்திருக்கிறது என்றில்லை. விளம்பர பாணியிலும் பாகுபலியைதான் பத்மாவதி பின் பின்பற்றி வருகிறது. முதலில் தீபிகா படுகோனே மற்றும் ஷாகித் கபூரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகின. பிறகு ரன்வீர் சிங்கின் ஃபர்ஸ்ட் லுக்கை தனியாக வெளியிட்டனர். இவை அனைத்தும் எஸ்.எஸ். ராஜமெளலியும் யுக்தி.

இப்படத்தில் வரலாற்று கதாபத்திரமான பத்மினி ராணியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். அலாவுதீன் கில்ஜியாக ரன்வீரும் நடித்திருக்கிறார். வைக்கோம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருகிறது. திரைப்படம் டிசம்பர் 1 அன்று வெளியாக இருக்கிறது என அறிவித்திருக்கிறது படக்குழு. 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close