[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சமந்தாவை கரம் பிடித்தார் நாக சைதன்யா

samantha-naga-chaitanya-married-in-goa

நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில் இந்து முறைப்படி நடந்தது. உறவினர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர். 

நடிகை சமந்தாவும் தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரண்டு பேர் வீட்டிலும் பச்சைக் கொடி காட்டினர். பின்னர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சமந்தா, கிறிஸ்தவர் நாக சைதன்யா இந்து. எனவே திருமணத்தை இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது.

கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு 11.52 மணிக்கு சமந்தா-நாகசைதன்யா திருமணம் நடந்தது. இந்து முறைப்படி சமந்தா கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். இதில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். கோவாவில் இன்று மாலை 5.30 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள். 

திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்களை சமந்தாவும், நாக சைதன்யாவும் மகிழ்ச்சியோடு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close