[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
சினிமா 04 Oct, 2017 08:15 AM

அக்.6 முதல் புதிய படங்கள் வெளியாகாது: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

new-movie-will-not-be-released-from-october-6

கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அக்டோபர் 6-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதமும், தமிழ் அல்லாத மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவிகிதமும் உள்ளாட்சி கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. செப்டம்பர் 27 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அக்டோபர் 6-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரைப்படத்துறையில் ஏற்கெனவே பைரஸி முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18%, 28% ஜி.எஸ்.டி., என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள். தற்போது விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே திரையரங்கு கட்டணத்தினை முறைப்படுத்தி, கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதனால், வருகிற வெள்ளிக்கிழமை 6ஆம் முதல் புதிய தமிழ் திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close