[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
  • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
  • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
  • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
  • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
  • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
  • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
  • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
  • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
சினிமா 01 Sep, 2017 10:40 AM

பெப்சி ஸ்டிரைக்: ’காலா’ உட்பட 30 படங்களின் ஷூட்டிங் பாதிப்பு!

30-films-shooting-affected-for-fefsi-strike

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) இன்று முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதையடுத்து ரஜினியின் ’காலா’ உட்பட் பல்வேறு 30 படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

பெப்சி அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நேற்று அறிவித்தது. அதுகுறித்து பேசிய அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ‘கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) பெரும் பங்கு வகித்து வருகிறது. தொழிலாளர்களுக்கான சலுகைகளை பெறுவதில் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பல சூழலில் இழுபறி நிலவிய போதும் எங்களது உரிமைகளை விட்டுக் கொடுத்து தமிழ் சினிமாவின் பயணத்துக்கு உதவியிருக்கிறோம். தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையை உணர்ந்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக்கூட விட்டுக் கொடுத்துள்ளோம். இந்நிலையில் எங்களது அமைப்பின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக புதிய அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. மற்றொரு தொழிலாளர் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறது. இதைக் கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்கிறோம். 5-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். கோரிக்கைகளை ஏற்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபடவுள்ளனர்’ என்றார்.
இதையடுத்து சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் நடந்துவந்த சுமார் 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close