[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ஹாலிவுட் படப்பிடிப்பில் விபத்து: பெண் பைக் ரேஸர் பலி

stunt-woman-dies-while-filming-deadpool-2

’டெட்பூல் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் பெண் பைக் ரேஸ் வீரர் பரிதாபமாக பலியானார்.

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமான ’டெட்பூல்’ 2016-ல் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. ரியான் ரெனால்ட்ஸ் நடித்துள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கனடா நாட்டின் வான்குவர் நகரில் நடந்துவந்தது. இதில், பெண் பைக் ரேஸர் எஸ்.ஜே.ஹாரிஸ் என்பவர் நடித்தார். இதுதான் இவருக்கு முதல் படம். 

படத்தில் வேகமாக பைக் ஓட்டிக்கொண்டு இவர் செல்ல வேண்டும். இதற்காக இரண்டு நாட்களாக பயிற்சி நடந்தது. நேற்றும் படப்பிடிப்புக்கு முன்பு வரை பயிற்சி எடுத்துக்கொண்டார் ஹாரிஸ். படப்பிடிப்புத் தொடங்கியபோது வேகமாக வந்த பைக், அவரது கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் மோதியது. இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்தச்சம்பவம் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பயிற்சியின் போது ஹெல்மெட் அணிந்திருந்த ஹாரி, காட்சிக்காக ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதால்தான் பலியானதாகக் கூறப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close