[X] Close
JUST IN
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க சரியான தலைமையின்றி காவல்துறை சிக்கி தவிக்கிறது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS நாட்டின் பொருளாதார அடிப்படை வலிமையாக உள்ளது: அருண் ஜெட்லி
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுப்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பாக இருப்பதை நெல்லை தீக்குளிப்பு சம்பவம் காட்டுகிறது: நல்லகண்ணு
 • BREAKING-NEWS பரோல் முடிந்து ஜோலார்பேட்டையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு புறப்பட்டார் பேரறிவாளன்
 • BREAKING-NEWS உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட், பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை
 • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று 10 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS இயக்குநர் ஐ.வி. சசி மரணத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல்
 • BREAKING-NEWS தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் யாராலும் மிஞ்ச முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்
 • BREAKING-NEWS 2 மாத கால பரோல் முடிந்து பிற்பகல் 3 மணிக்கு வேலூர் சிறைக்கு திரும்புகிறார் பேரறிவாளன்
 • BREAKING-NEWS ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை
 • BREAKING-NEWS கந்துவட்டிக் காரனை விட மோசமானவர்கள் அரசியல்வாதிகளும், பதவியில் இருப்பவர்களும்: சுசீந்திரன்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையில் சிக்கிய ஈரோடு நெசவுத் தொழிலாளியின் கிட்னியை எடுப்பது தடுத்து நிறுத்தம்
 • BREAKING-NEWS ஈரோட்டிலும் கந்து வட்டி கொடுமை: கிட்னி விற்க நிர்பந்தம்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் தமிழிசை உருவபொம்மையை எரிக்க முயன்ற போலீசார், விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு
சினிமா 04 Aug, 2017 07:17 PM

படப்பிடிப்பின்போது உதவியாளரை அறைந்த பிரபல நடிகர்!

telugu-actor-nandamuri-balakrishna-slaps-assistant

படப்பிடிப்பின்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா தனது உதவியாளரை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா - நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள மேக்கப் போட்டுக்கொண்டு வந்த பாலகிருஷ்ணா திடீரென தனது உதவியாளரை அருகில் அழைத்து ஓங்கி ஒரு அறை அறைந்தார். தனது காலில் இருந்த காலணிகளின் லேசை கட்டாமல் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்ததால் பாலகிருஷ்ணா தனது உதவியாளரை அடித்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணாவின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


பாலகிருஷ்ணாவுக்கு இது 102வது படம். உதவியாளரை பாலகிருஷ்ணா அடித்தது குறித்து அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் விளக்கமளித்துள்ளார். அதில் ’கோவிலுக்குள் காட்சி படமாக்கப்பட இருந்தது. அந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாகவே தனது காலணியை கழட்ட வேண்டும் என தனது உதவியாளரிடம் பாலகிருஷ்ணா நினைவுபடுத்தி இருந்தார். அவர் ஷாட்டுக்கு தயாராகும் வரை உதவியாளர் அங்கு இல்லை. தான் நினைவுபடுத்தி இருந்தும் உதவியாளர் கண்டுகொள்ளாததால் அவரை அழைத்து லேசாக தட்டி தனது ஷூவை கழட்ட வேண்டும் என நினைவுபடுத்தினார். அந்த வீடியோ பரவி பாலகிருஷ்ணா மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விட்டது. மக்கள் யாரும் இதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 


இதுபோன்ற சர்ச்சைகளில் பாலகிருஷ்ணா சிக்குவது இது முதல்முறையல்ல. பல படங்களின் படப்பிடிப்பின்போது சக நடிகர்கள், நடிகைகளை கிண்டல் செய்வது, அவமரியாதையாக நடந்து கொள்வது என பல்வேறு சர்ச்சைகளில் பாலகிருஷ்ணா சிக்கியுள்ளார்.  தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் பாலகிருஷ்ணா அக்கா ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியாவார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close