[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

கமல் வீட்டில் திடீர் தீ

fire-in-kamals-house-tweets-safe

நடிகர் கமல்ஹாசன் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் புத்தகங்கள் எரிந்து நாசமானது.

நடிகர் கமல்ஹாசனின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அறையில் இருந்த புத்தகங்கள் தீயில் கருகி சாம்பலானதாகக் கூறப்படுகிறது.

ஃப்ரிஜ், அதிக வெப்பமடைந்ததால் தீ விபத்து நடந்ததாகவும், இதனால் அதன் அருகில் இருந்த புத்தகங்களில் தீ பற்றி புகை சூழ்ந்ததாகவும் தெரிகிறது.விரைந்து வந்த ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.

இத்தகவலை டிவிட்டரில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், தீ விபத்திலிருந்து தாம் தப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தீ விபத்தால் உருவான புகையை அதிகமாக சுவாசிக்க நேரிட்டதாகவும் இதையடுத்து மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தாம் பத்திரமாக இருப்பதாகவும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Kamalhassan fire safe tweetbooks fire kamalhaasan tweet
Advertisement:
Advertisement:
[X] Close