[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

கட்டப்பா சீக்ரெட்: பாதுகாப்பை பலப்படுத்திய ராஜமவுலி

rajamouli-tightened-security-in-edit-shooting

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம், ’பாகுபலி’. சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் இந்தப் படத்தின் போர்க்காட்சிகள் ரகசியமாக வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்தது. இதையடுத்து காட்சியை கசியவிட்ட கிராபிக்ஸ் என்ஜினீயர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் படத்தின் டிரைலர், அதன் வெளியீட்டுக்கு முன்பே லீக் ஆனது. இதனால் கடுப்பான இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை நடக்கும் இடத்தில், பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார். அதாவது எடிட்டிங் நடக்கும் இடத்துக்குள் வெறும் ஏழு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களும் சிசிடிவி கேமராவால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ். இதுதான் படத்தின் ஹைலைட்டும் கூட. இந்த விஷயம் வெளியே தெரிந்துவிட்டால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு புஸ்வானமாகிவிடும் என்பதால் பாதுகாப்பை பலத்தி இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close