[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

கமல்ஹாசன் அண்ணன் சந்திரஹாசன் காலமானார்

kamal-hassan-brother-chandra-hassan-passed-away

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

நடிகர் கமல்ஹாசனுக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரண்டு அண்ணன்கள். இதில் சாருஹாசன் திரைப்படங்களில் நடித்துவருகிறார். சந்திரஹாசன், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைக் கவனித்துவந்தார்.

கடந்த ஜனவரி மாதம் சந்திரஹாசனின் மனைவி கீத மணி உயிரிழந்தார். இதையடுத்து தனியாக வசிக்கப் பிடிக்காமல் லண்டனில் வசிக்கும் மகள் அனுஹாசனின் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். மறைந்த சந்திரஹாசனுக்கு அனுஹாசன், நிர்மல் ஹாசன் என்ற இரண்டு பிள்ளைகள். அனுஹாசன் நடிகை. நிர்மல் ஹாசன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தந்தையின் மரணத்தை அடுத்து நிர்மல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு விரைந்துள்ளார். சந்திரஹாசன் மரணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close