[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

பாலா-இளையராஜா-ஜோதிகா கூட்டணியில் வருகிறது "நாச்சியார்"

jyothika-bala-film-titled-as-naachiyar

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரும், ஜோதிகாவும் நடிக்கும் புது படத்திற்கு நாச்சியார் என பெயரிடப்பட்டுள்ளது.

36 வயதினிலே மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஜோதிகாவுக்கு, அவர் நினைத்தபடியே நல்ல வரவேற்பு உள்ளது. மகளிர் மட்டும் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாலா இயக்கும் “நாச்சியார்” படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இசையமைப்பாளர் இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் குமாரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக மிரட்ட வருவதாகவும், ஜி.வி வில்லனாக களம் இறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். பொதுவாகவே வித்யாசமான கதைகளை இயக்க வல்லவர் இயக்குனர் பாலா. எனவே அவரின் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் “நாச்சியார்” படத்தையும் ரசிர்கள் கவரும் வகையில் பாலா இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close