[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

சினிமா இயக்குனரின் நாக்கை அறுத்துக்கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பால் பரபரப்பு

bollywood-director-threatened-by-village-people

பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடிப்பில் ‘டாய்லட்-ஏக் பிரேம் கதா’ என்ற படத்தின் படப்பிடிப்பு மதுரா நகரில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தின் இயக்குனர் நாரயண் சிங்கின் நாக்கை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என மதுரா நகர மகா பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா, பிருந்தவன் நகருக்கு இடையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை ஆதரித்து இப்படம் எடுக்கப்படுகிறது. இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் இந்நகரத்தில் ஸ்ரீகிருஷ்ணர், நந்தகாவ்ன் கிராமத்தையும் அவருடன் லீலைகள் செய்த ராதை, பர்ஸானா கிராமத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை. இதனால், இந்த கிராமத்தவர்களுக்கு இடையே அந்தக் காலம் முதல், திருமண உறவு கிடையாது. ஆனால் படத்தின் கதைப்படி நாயகன் நந்தகாவ்ன் கிராமத்தையும் நாயகி பர்ஸானாகிராமத்தையும் சேர்ந்தவர்களாக காட்டப்பட உள்ளது.

இது தொடர்பாக மதுராவை சுற்றியுள்ள 20 கிராம மக்களின் மஹா பஞ்சாயத்து, சாதுக்கள் தலைமையில் கடந்த திங்கள் கிழமை இரவு நடைபெற்றது. அப்படத்தின் மீது கோபம் கொண்ட மஹா பஞ்சாயத்தினர், அதன் இயக்குநர் நாரயண் சிங்கின் நாக்கை வெட்டி வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இதுபற்றி மதுராவின் தலைமை சாதுவாகக் கருதப்படும் பூல் தோல் மஹராஜ் கூறியுள்ளதாவது ‘இது தங்கள் வழக்கத்தை முறிக்கும் வகையில் உள்ளதாகவும் படத்தின் கதையையும் தலைப்பையும் மாற்றவில்லை எனில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் படத்தின் படப்பிடிப்பை வேறு இடத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close