[X] Close
JUST IN

பெண்களை இழிவு படுத்தினாரா ரன்வீர் சிங்?.. டுவிட்டரில் விளாசித்தள்ளிய ஜில் ஜங் ஜக் நடிகர்..!

siddharth-comments-about-ranveer-singh-advertisement

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் விளம்பர போஸ்டரை பார்த்து நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ‘ஜாக் அன்ட் ஜோன்ஸ்’ என்ற ஆண்கள் ஆடை விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங் ஒரு பெண்ணை தனது தோளில் தூக்கி நிற்கிறார். மேலும் அந்த போஸ்டரில் ‘வேலையை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்’ என்ற வசனமும் இடம் பெற்றிருந்தது. அந்த போஸ்டரை பார்த்த நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவில் உள்ள பணியிடங்களில் பெண்களின் உரிமை தரம் தாழ்ந்துள்ளது. பெண்மையை போற்றும் இடத்தில் இப்படி செய்யலாமா..? அவர்கள் என்ன நினைத்து இப்படி எடுத்தார்கள்? என சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

சித்தார்தின் இந்த விமர்சனத்திற்கு ஜாக் அன்ட் ஜோன்ஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது. எங்களது விளம்பர பலகைகள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்தோடு வைக்கப்படவில்லை. இருப்பினும் அதுகுறித்து விமர்சனம் எழுந்துள்ளதால் அதனை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close