[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டி
  • BREAKING-NEWS 2023-ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூருக்கு வரும் நீரின் அளவு இன்று இரவுக்குள் 50 ஆயிரம் கன அடியை எட்டும் - ஜல்சக்தி துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS விலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை!

நடிகர் விஷால் ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் இடையே கைகலப்பு

the-clashes-between-supporters-and-opponents-of-vishal

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நேற்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு அவரது எதிர்ப்பாளர்கள் சென்னை தி.நகரில் தேங்காய் உடைத்தனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த விஷால் ஆதரவாளர்கள் தட்டிக்கேட்டனர். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. முன்னதாக நேற்று மாலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தயாரிப்பாளர் சங்கத்தில் பஜ்ஜி, போண்டா சாப்பிடுகிறார்கள் என்று நான் சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். பஜ்ஜி, போண்டா சாப்பிடுகிறார்கள் என்று சொன்னது தவறு அல்ல அது ஒரு உணவு தான். இதன் தொடர்சியாகவே என்னை நீக்கி இருப்பதாக நினைக்கிறேன். இதை எனது வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து சட்டப்படி சந்திப்பேன். என்னை நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆச்சர்யம் அளிக்கிறது என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close