[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

விரைவில் விஜய் சேதுபதியின் 'அநீதி கதைகள்'

vijay-sethupathi-s-next-release

விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் ‘அநீதி கதைகள்’ திரைப்படத்தின், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடையும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

‘ஆரண்ய காண்டம்’ படம் மூலம் கவனத்தை ஈர்த்த தியாகராஜா குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘அநீதி கதைகள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சமந்தா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வரும் புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியானது. படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த சில தினங்களுக்குள் முடிவடையும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக இளம் இயக்குனர்களுடன் பணிபுரிவதில் ஆர்வம் காட்டி வரும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதல் முறையாக தியாகராஜா குமாரராஜாவுடன் கைக்கோர்த்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இதுவரை அதிகம் எண்ணிக்கையில் திரைப்படங்கள் வெளியானது நடிகர் விஜய்சேதுபதிக்கு தான். இதுவரை ஆறு படங்கள் வெளியான நிலையில் ‘புரியாத புதிர்’, ‘கவன்’ திரைப்படங்களும் இந்தாண்டே வெளியாகும் எனத் தெரிகிறது.

மேலும் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் த்ரில்லர் படமாக வெளிவரவிருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம் தெலுங்கில் ‘பீட்சா 2’ என்ற பெயரில் வெளிவரவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close