[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

என் பெயரில் அறிக்கை விட்டு விளையாடுவது அநாகரீகம்: கமல்ஹாசன்

kamalhassan-twitter-about-rumours

தனது பெயரில் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

1980-90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக கடந்த 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தானும் கமல்ஹாசனும் பிரிந்து விட்டதாக நேற்று கவுதமி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார். தனது மகளின் எதிர்காலம் கருதி, இரண்டு ஆண்டுகள் தீவிர ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

கவுதமி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, கமல் பெயரில் சமூக வலைத் தளங்களில் பதிவுகள் வெளியானது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு இட்டுள்ள கமல், ‘இத்தருணத்த்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close