[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறைவு !

finished-pobby-simha-keerithisuresh

பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு நேற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

தரமான தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் உருவெடுத்து வரும் மனோபாலா, தயாரிக்கும் இரண்டாவது படமான ‘பாம்பு சட்டை’ திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆடம்ஸ் என்பவர் இயக்கி வருகிறார்

கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென நின்றுவிட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது.

இதில் பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . தற்போது தொழில் நுட்ப ரீதியாக படத்தை மேலும் மெருகேற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close