[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

ஹாலிவுட் செல்லும் சீனா... ஸ்பீல்பெர்க்குடன் கைகோர்த்த அலிபாபா

alibaba-founder-jack-ma-ties-up-with-steven-spielberg-for-film-production

இணைய வணிகத்தில் முன்னணியில் உள்ள சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனம் படங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்காக ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் கைகோர்த்துள்ளது.

இதற்கான அறிவிப்பை அலிபாபா நிறுவனத்தின் உரிமையாளர் ஜேக் மா மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அலிபாபா நிறுவனத்தின் திரைப்படப் பிரிவான அலிபாபா பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் ஆம்ப்லின் நிறுவனமும் படங்களை இணைந்து தயாரிக்கவும், விநியோகிக்கவும் முடிவு செய்துள்ளன. சினிமாவுக்கான உலகின் இரண்டாவது சந்தையாக இருக்கும் சீனா, இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவை முந்தி முதலிடம் பிடிக்கும் என்று கருதப்படுகிறது.

ஜுராசிக் பார்க், இண்டியானா ஜோன்ஸ் உள்ளிட்ட மிகப்பெரிய ஹிட் படங்களை இயக்கிய ஸ்பீல்பெர்க்குடன் கைகோர்த்துள்ளது மூலம் ஹாலிவுட்டில் சீன நிறுவனத்தின் முதலீடு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close