[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு
  • BREAKING-NEWS வீரர்களை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக செயல்படுகிறது - சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் 9 சொகுசு கார்கள் பறிமுதல்
  • BREAKING-NEWS ஐயா நல்லகண்ணுவை சந்தித்தேன்; அவரை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்திடம் பேசியபோது ‘நீங்களெல்லாம் வரணும்’ என கூறினார்- கமல்ஹாசன்

ராஜபாளையம் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்

rice-harvest-in-rajapalayam-area

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் நெல் அறுவடை தொடங்கியுள்ளது. உரிய நேரத்தில் பருவ மழை பெய்ததால் கடந்த 5 ஆண்டுகளை விட இந்தாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சேத்தூர், பிறாகுடி, சிலம்பநேரி, நடுவக்குளம், உமையாள்குளம் உள்ளிட்ட கண்மாய்களை நம்பி சாகுபடி செய்யப்பட்டிருந்த 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளைநிலங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது.

மழை நீர் புகுந்து பாதிக்கப்பட்ட நிலங்கள் தவிர மற்ற பகுதிகளில் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 முதல் 35 மூட்டை வரை நெல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கண்மாய்களில் தண்ணீர் இருப்பதால் சித்திரை மாத 2-ஆம் போக சாகுபடிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என கூறும் விவசாயிகள், அரசு விதைப்பு நெல்லையும், உரங்களையும் உரிய நேரத்தில் மானியத்துடன் வழங்கி உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close