வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன்கூடிய மழைபெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை இருக்கும் எனவும், அதன்பிறகு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 30லிருந்து 40 கி.மீ வேகத்தில் காற்றுடன் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. 14ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்லில் கனமழை பெய்யும் எனவும், 15ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் 18ஆம் தேதிக்குப்பிறகே வெப்பநிலை உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்