[X] Close

கிருஷ்ணகிரி: 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

குற்றம்

Krishnagiri-A-government-school-teacher-has-been-arrested-for-trying-to-kidnap-a-16-year-old-girl-and-marry-her

மத்தூர் அருகே பிளஸ்-1 படிக்கும் மாணவியை கடத்திய அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஜிஞ்சம்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி காவியா (30). கூலித்தொழிலாளியான இவர், மூர்த்தியின் முதல் மனைவியின் மகளான 16 வயது சிறுமியுடன் சேர்ந்து வசித்து வருகிறார். வறுமை காரணமாக மகளுடன் திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். சிறுமி, திருவண்ணாமலையில் உள்ள டேனியல் மிஷன் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தனது மகளுடன் சொந்த ஊரான ஜிஞ்சம்பட்டிக்கு சென்றார்.பின்னர் கடந்த 9ஆம் தேதி மீண்டும் மேல்செங்கத்திற்கு செல்ல மத்தூர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது மாணவி திடீரென மாயமானார். இது குறித்து காவியா மத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.


Advertisement

image

அந்த புகாரில், தன்னுடன் வந்த 16 வயது சிறுமியை, திருவண்ணாமலை மாவட்டம் நாகனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் சரண்ராஜ் (31) என்பவர் திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றிருக்கலாம். எனவே, அவரிடமிருந்து சிறுமியை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், ஆட்கடத்தல் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் சரண்ராஜை கைது செய்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close