Published : 05,Apr 2021 02:01 PM
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் படுகாயமடைந்தனர்.
சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் பகுதியில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 20-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உராய்வு காரணமாக திடீரென ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் ஆலையில் இருந்த ஐந்து அறைகள் தரைமட்டமாகின.
இந்த விபத்தில் தர்மராஜ் என்ற தொழிலாளி உயிரிழந்தார். மேலும், இருவர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 7 பட்டாசு ஆலைகளில் நடந்த வெடி விபத்துகளில் 37 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.