Published : 04,Apr 2021 10:14 PM

அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஐபிஎல் போட்டிகள் மும்பையில் நடக்குமா?

Rise-in-corona-case-may-cause-damage-of-IPL-plans

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டப்படி மும்பையில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

14 ஆவது ஐபிஎல் சீசன் வரும் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா ஆகிய 6 ஊர்களில் இப்போட்டிகள் நடக்கின்றன. கொரோனா நாடெங்கும் அதிகரித்துள்ள இச்சூழலில் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து போட்டிகளை காண தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரில் பங்குபெறும் வீரர்கள், பயிற்சியாளர்கள், அம்பயர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு தொற்று ஏற்படாத வண்ணம் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

image

இவற்றையும் மீறி ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இளம் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்பட்டுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தேவ்தத் படிக்கல்லுக்கு தொற்று உறுதியானதால் மற்ற வீரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அக்ஸர் பட்டேலுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் மும்பை மைதானப் பணியாளர்கள் 10 பேருக்கும் போட்டி மேலாளர்கள் 6 பேருக்கும் தொற்று உறுதியாகியிருந்தது. இது தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருமே மும்பையில் தங்கியிருப்பவர்கள் ஆவர். இதனால் மும்பையில் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாகும் போதும் ஐதராபாத் அல்லது இந்தூருக்கு போட்டிகள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

image

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அங்கு கடுமையான பொது முடக்கம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்