சென்னையில் உணவுப் பிரியர்களுக்கு சைதாப்பேட்டை என்றாலே நாக்கை சப்புக்கொட்ட செய்யும் 'வடகறி' தான் நினைவுகளைத் தானாக தட்டி எழுப்பிவிடும். அந்த வகையில், தேர்தல் பணிக்கு இடையே 'சைதாபேட்டை வடகறி'க்கு புகழ்பெற்ற உணவத்துக்கு ஒரு சின்ன விசிட் அடித்தேன்.
சைதாப்பேட்டை வட்டாரத்தில் மட்டுமே சுவைத்து கொண்டிருந்த இந்த வடகறியை, அதன் அதிகாரபூர்வமற்ற பிராண்டு அம்பாசிட்டராக இருந்து தமிழகம் முழுவதும் அறியச் செய்ததன் பெருமை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனையே சாரும். ஒரு திரைப்படத்தில் அவர் உதிர்த்த 'சப்பாலங்கிரி கிரி கிரி' என்ற வசனம் சைதாப்பேட்டை வடகறியின் பிராண்டு ஸ்லோகன் ஆனது.
வடகறி என்றால் சைதாப்பேட்டை எப்படி நினைவுக்கு வருகிறதோ, அதேபோல சைதாப்பேட்டை மக்களுக்கு வடகறி என்றால் நினைவுக்கு வருவது சைதாப்பேட்டையில் இயங்கி வரும் 'மாரி ஓட்டல்'. சைதாப்பேட்டைக்கு வடகறியை அறிமுகப்படுத்திய பெருமை, இந்த மாரீ ஓட்டலையே சாரும்.
பருப்பு வடையின் அடுத்த அப்டேட் வெர்ஷன்தான் இந்த வடகறி. கடையில் பருப்பு வடைக்காக தயாரிக்கப்பட்ட கடலைமாவு மீதமான நிலையில், அதனை வெங்காயம், தக்காளி, மசாலா கலவையோடு சேர்த்து தயாரிக்கப்படும் உணவுதான் வடகறி.
இந்த வடகறி இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எல்லா காலை உணவுகளுக்கும் பிரதான 'சைட் டிஷ்' ஆக உள்ளது. மாரீஸ் ஓட்டலில் வடகறியை வாங்குவதற்கென்ற ஏராளமான மக்கள் தனியாக வீட்டில் இருந்து பாத்திரம் எடுத்து வருகின்றனர். வீட்டில் சுடச்சுட இட்லியும், தோசையும் மட்டும் தயார் செய்து விட்டு, அதே வேகத்தில் மாரீஸ் ஓட்டலுக்கு ஒரு விசிட் அடித்து, கொண்டு வந்த பாத்திரத்தில் வடகறியை வாங்கி செல்கிறனர் சலிப்பு தட்டாத சைதைவாசிகள்.
"தனிச்சுவை மட்டுமின்றி, தரத்தில் துளி புகாரும் வராத அளவுக்கு தயார் செய்வதில் எப்போதும் கவனம் செலுத்துவதுதான் எங்கள் மீது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குக் காரணம்" என்கின்றனர் இந்த உணவகத்தினர்.
வடகறிக்காக தனி அடுப்பு எறிந்து கொண்டிருந்தாலும், காலை 7.30 மணியில் தொடங்கி 9.30 மணிக்குள் மட்டுமே வடகறியை வாங்க முடியும்.
- கதிரவன்
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!