[X] Close

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் மீண்டும் கடத்தல்!

Mumbai-gang-rape-survivor-again-kidnapped-and-raped

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் மீண்டும் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மும்பை அருகேயுள்ள கோரேகானில் டிண்டோஷி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கொஞ்சம் மனநலம் சரியில்லாதவர். இவர், தனக்கு அடிவயிறு வலிப்பதாகக் கூறியதை அடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

அக்கம் பக்கத்தில் உள்ள சிலர் அவரை கடத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர். இவர்களின் அடையாள அணிவகுப்பு 17-ம் தேதி ஆர்தர் சாலை சிறையில் நடப்பதாக இருந்தது. ஆனால், அதற்குள் சிறுமியை காணவில்லை. அவர் கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டார். பின்னர் அவரது பெற்றோர் போலீசில் மீண்டும் புகார் தெரிவித்தனர். 


Advertisement

கடந்த புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பிய சிறுமி, தன்னை சிலர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொன்னார். விசாரணை நடத்திய போலீசார் கந்திவளியில் 2 ஆட்டோ டிரைவர்களை கைது செய்தனர். முதலில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர்களும் இரண்டாவது முறை கடத்தியவர்களுக்கும் தொடர்பு இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரே சிறுமி இரண்டு முறை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement

Advertisement
[X] Close