Published : 21,Mar 2021 05:05 PM
‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகிறார் பகத் பாசில்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பகத் பாசில், தெலுங்கு சினிமா நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். புஷ்பா படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ட்வீட் மூலம் இதனை உறுதி செய்துள்ளது.
இயக்குனர் சுகுமார் படைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். கேரளா மற்றும் ஆந்திராவில் இந்தப் படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது.
தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி மற்றும் கன்னட மொழியில் இந்த படம் வெளியாக உள்ளது. தெலுங்கு மொழியை தவிர மற்ற அனைத்து மொழிகளும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
Welcoming #FahadhFaasil on board for the biggest face-off ?@alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @PushpaMovie #VillainOfPushpa #Pushpa
— Mythri Movie Makers (@MythriOfficial) March 21, 2021
పుష్ప പുഷ്പ புஷ்பா ಪುಷ್ಪ पुष्पा pic.twitter.com/ndweB09rXi
முதலில் இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக பேச்சுகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளிவந்த விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘உப்பெனா’ தெலுங்கு மொழி படம் வசூலில் சக்கைபோடு போட்டிருந்தது.